Pages

Wednesday, December 22, 2010

வில்லினை ஒத்த புருவங்கள்

வில்லினை ஒத்த புருவங்கள்
பாரதியார் பாடல்.  முதலில் எம்.எஸ். பாடுவதை கேட்போம்.





அதே பாடல். நித்ய ஸ்ரீ பாடுகிறார்.
காவடி செந்து மெட்டில்





வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!


வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!

பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

ந்த பாடலுக்குப் பொருள் சொன்ன கண்ண பிரான் இங்கே இருக்கிறார். பதிவின் தலைப்பை கிளிக்கினாலும் வருவார்.  அவர் கண்ண பிரான்.

Wednesday, December 15, 2010

திருமகள் உலாவும் - திருப்புகழ்

திருமகள் உலாவும் - திருப்புகழ்

 தமிழ் ஆன்மீக உலக பதிவாளர் திரு கே.ஆர்.எஸ். இடுகை. இது.
 பித்துகுழி முருகதாஸ் பாடும் பஜன் முருகப்பெருமானைக் குறித்து.
 




Monday, December 13, 2010

சின்னச் சின்ன முருகா



சின்னச் சின்ன முருகா
சிங்கார முருகா
வண்ண எழில் முருகா வாடா
வந்து அன்பு முத்தம் ஒன்றெனக்கு தாடா

செல்லச் செல்ல முருகா
செந் தமிழின் தலைவா
பண்ணில் உன்னைப் பாடுகிறேன் வாடா
வந்து பாச முத்தம் ஒன்றெனக்கு தாடா

சின்னச் சிலம் பொலிக்க
‘கல்கல்’ என்று சிரிக்க
துள்ளித் துள்ளி என்னிடத்தில் வாடா
வந்து வெல்ல முத்தம் ஒன்றெனக்கு தாடா

எண்ண மெல்லாம் இனிக்க
உள்ள மெல்லாம் களிக்க
வண்ணமயில் ஏறி இங்கு வாடா
வந்து வாய் மணக்க ஆசை முத்தம் தாடா

Composed by Madam Kavinaya and
Posted by kannabiran, RAVI SHANKAR (KRS
அவரது வலைக்குச் செல்ல தலைப்பைக் கிளிக்கவும். 

TODAY ONE MORE SONG





Wednesday, December 8, 2010

kandha puranam..by THIRUMURUGA KIRUPANANDHA VARIYAR

Vaariyar 1.mp3


Get this widget | Track details | eSnips Social DNA

கண்ட நாள் முதலாய்

       

                       
   
Powered by Podbean.com
   




     கண்ட நாள் முதலாய்
    " முருகனருள் " எனும் பதிவுக்கு சொந்தக்காரர் இந்த திரைப் படப் பாடலினை,
      முருகனது அழகிலே காதல் கொள்ளும் பக்தனின் மன நிலையைச் சித்தரிக்கும்
      பாடலை தனது வலையிலே இட்டு தனக்கும் முருகா எனக்கூவி அழைப்போருக்கும்
      முருகனது அருளினைப் பெற வழி வகுத்து இருக்கிறார்.  பாடல் கேட்பது, 
      கொளுத்தும் வையிலிலே மோர் தருவது போல் , இனிய பானகம் தருவது போல்
       இருக்கிறது.  நீங்களும் கேளுங்கள்.
       கேட்ட பாடல் என்றாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் கேட்கலாம்.
       அவர் பதிவுக்குச் செல்ல இத்தலைப்பைக் கிளிக்குங்கள்.

Sunday, December 5, 2010

Velayya vadivellayaa



Courtesy: muruganarul

பாட்டின் வடிவு காண பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.

Friday, December 3, 2010

அறுபடை வீடு





அற்புதமான பாடல் ஆறுபடை வீடு உடையோன் முருகப் பெருமான் அருள் வேண்டி.
நமது நண்பர் திரு சுப்பையா அவர்களின் நண்பர் முனைவர் திரு சிங்காரவேலர் அவர்கள் எழுதியது. பாடல் வரிகளைக்கேட்க இங்கே கிளிக்கவும்.

Thursday, December 2, 2010

Arumugam



THIS Song is available in http://muruganarul.blogspot.com All credit goes to the author of that blog only.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

ஓம் என்று நினைத்தாலே போதும்.



ஓம் என்று நினைத்தாலே போதும்.