கால்கள் அருள் வேண்டி, நின்
கால்கள் அருள் வேண்டி
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கால்கள் அருள் வேண்டி
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!
சிந்தனை எல்லாம் நீ சுந்தர வடிவேலா !
எந்தனை காக்க வா !!
பந்தங்கள் தொலைத்து நான் நின் பதம் சேர்ந்திட
வந்தெனை வாழ்விக்க வா !!
வேளை இ (ன்)னும் வந்திலையோ !! என்
வேதனைகள் தீர்த்திடவே !!
வேலா.!. உமை பாலா !!
வெண்ணீறு அணிந்தவா !!
வேலாயுதம் கொண்டே.. என்
வினைகள் தீர்க்க வா !! ...( கந்தா..கடம்பா... )
சரவண பவ ... நின்
சரணங்கள் பணிந்து நின்றேன்.
மரணம் வரும் அந்நாளில் .. நீ
வரணும் எனக் காத்திருப்பேன் . அருள்
தரணும் எனத் தவமிருப்பேன்.... (கந்தா.. கடம்பா...)
கால்கள் அருள் வேண்டி, நின்
கால்கள் அருள் வேண்டிகால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!