Pages

Tuesday, February 28, 2012

முருகா முருகா வாடா



you may listen here also:
பாடலை இங்கே கேளுங்கள்.
http://youtu.be/dRjLvfQmXOs

முருகா முருகா வாடா - சின்ன
முத்துக் குமரா வாடா!
கந்தா கடம்பா வாடா - எங்கள்
கார்த்தி கேயா வாடா!

சின்னஞ் சிறு அடி எடுத்து – முருகா
சித்திரம் போல நடந்து வாடா!
வண்ண மணி ஒலித்திடவே – நீயும்
வண்ண மயில் ஏறி வாடா!

சந்தத் தமிழ் பாட்டுனக்கே – செல்லமே
கேட்க நீயும் ஓடி வாடா!
சங்கத் தமிழ் தந்தவனே – எங்கள்
சங்கடங்கள் தீர்க்க வாடா!

நானிருக்கும் நாள் வரைக்கும் – முருகா
நாடி உனை வணங்கிடணும்!
தேனிருக்கும் உன் பெயரே – தினம்
என் நாவில் தவழ்ந்திடணும்!

--கவிநயா

பன்னிருகரம் மூவிரு சிரம்




அதிசுந்தரம் !!

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

அசுரரையழித்த சுர சேனானி
ஒளிருது வெண்ணீறணிந்தவன் மேனி !
துணைவியாம் குன்றத்தில் தேவயானி !
தணிகையில் வள்ளியாம் இளையராணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

வற்றாது கருணை சுரந்திடும் கேணி
பழநியம்பதிவாழ் தண்டாயுதபாணி !
பிறவிக்கடல்தாண்ட உதவிடும் தோணி
"சரவணபவ "எனும் மந்திரவாணி !

பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!

 Lalitha Mittal

 Listen here.

Saturday, February 25, 2012

Thursday, February 23, 2012