கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Friday, April 26, 2013
Wednesday, April 24, 2013
செந்தில் நகர் மேவும் தேவா
THIS VIDEO WAS SEEN BY ME AT www.kannansongs.blogspot.com
Courtesy: MY WEB FRIEND MR.KANNABIRAN.
COMPOSER OF THIS SONG : LALGUDI JAYARAMAN
செந்தில் நகர் மேவும் தேவா - சிவபாலா,
நீ சிந்தை இரங்கி எனை ஆளவா - வேலவா!
எந்த வேளையும் உன்னை அன்றி - வேறோர் எண்ணம் உண்டோ? எந்தன் உள்ளமும் நீ அறியாயோ? - ஏன் இந்த மாயம்?
(சிட்டை ஸ்வரம்)
இது தகுமோ? தருமம் தானோ?
வாராதிருக்க மருமம் ஏனோ?
கனிந்து வந்திடா விடில், யான் என் செய்குவேன்?
ஏதும் புகலிடம் அறியேன்;
ஒரு கணமேனும் மறந்தறியேன்;
இவ்விளம் பேதை.. மகிழ -
முழு மதி - முகம் அதில் -
குறுநகை யொடு கருணை - பொழிய வா -
அருளே தருக வா - திரு மால் மருகா!
(முடிப்பு)
வா வா, ஆடும் மயில் மீது வா!
அழகா முருகா நீ..
. உன் வடிவழகைக் காண, என் முன் நீ (வா வா,
ஆடும் மயில் மீது வா!)
என் முறை கேட்டிலையோ?
வர மனமிலையோ?
செவி புகவிலையோ?
இனியாகிலும் (வா வா,
ஆடும் மயில் மீது வா!)
உருகி உருகி, உளம், ஊண் உறக்கம் இன்றிப்
பெருகிப் பெருகி, விழி உடலது சோர்ந்திட
ஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்
மனம் வாடினேன் - துயர் ஓடிடவே
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
அன்றே ஒரு நாளும் உனைக் கை விடேன் - என அன்புடனே
ஆதரவைச் சொன்னதும், மகிழ்ந்துளம் கலந்ததும் - சிறிதும் நினைவிலையோ?
பரம தயையும் - பரிவும் உறவும் - மறையுமோ இன்று?
இனித் தாளேன்!
தணிகை வளரும் அரு மணியே, என் கண் மணியே,
என் உயிரின் துணையே!
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
எழுதி/இசை: லால்குடி ஜெயராமன்
Tuesday, April 9, 2013
Friday, April 5, 2013
Monday, April 1, 2013
SUBRAMANIA PA MALAI 2
துர்க்கை சித்தர் அருளிய சுப்பிரமணிய மாலை.
இது இரண்டாம் பாடல்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகம்.
இன்று ராகம் மோஹனம். இந்த song ஐ நான் மேடம் கவினயா அவர்களுக்கு DEDICATE செய்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)