Pages

Monday, September 14, 2015

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்




எப்போதோ இந்தப் பாடலை பெங்களூர் இரமணி அம்மாள் பாடிடக் கேட்டிருக்கிறேன்.
அந்த ராகம் நினைவில் இல்லை. 

இன்றோ கந்தன் வந்த உடன், 
என் மனதில் தெரிந்த ராகத்தில் பாடி விட்டேன். 

பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களுக்கு என் நன்றி. 
இந்தப் பாடலை இயற்றியவருக்கும் எனது நன்றி.
கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்

Wednesday, June 3, 2015

28 முருகனின் தலங்கள்

 28 முருகனின் தலங்கள்

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
(மருத மலையானே நாங்கள்)

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே

வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே

திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூசித்த குமரா
தென்திருமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா

வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்டமலைத் தெய்வமே வெற்றி வேலே

அமரர் கூட்டம் ஆடவும், அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரக்கோட்ட தவமணியே
அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சினில்,
அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தகோட்டத் தமிழ்க்கனியே

தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே

வீறிட்டு எழுந்த சூரன் போரிட்டு அழிய
திருப்போரூரில் வேல்விடுத்து நின்றவா
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா

பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
உத்திரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே; மயிலை ஆடச் செய்தவனே

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
பெற்ற முருகனே சண்முகா முத்துக்குமாரா
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா

திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு
எண்கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
கந்தன்குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா

தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
செட்டிமகன் என்னும் இறைவா, செந்தமிழின் தலைவா
எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா

பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
திருப்புகழ் பாடிய வயலுரா
புலவன் நக்கீரன் புனைந்த 
முருகாற்றுப்படை போற்றும் விராலி மலை வீரா

கொன்றதொரு சூரனைக் கோல மயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா

-------------------------------------

(கண்ணதாசன்)

பருவத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே

தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட வா… வா ..வா

வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
நலம் பெற வேண்டும் மகனய்யா
நம்பிக்கை தருவாய் கந்தய்யா

தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே
கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
சுவாமி மலை வாழும் குருநாதா
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா

பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர் சோலைக்கு வந்தவனே
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
வேலவனே..
வேலவனே..

படம்: துணைவன்
வரி: மருதகாசி & கண்ணதாசன்
இசை: கேவி மகாதேவன்
குரல்: TMS & பி.சுசீலா இந்தப் பாடலை சுப்பு தாத்தாவும் பாடி இருக்கிறார்.
அதை இங்கே கேளுங்கள்.


Friday, April 10, 2015

ஆறுமுகம் இருக்க, அவன் கை வேல் இருக்க



ஆறுமுகம் இருக்க, அவன் கை வேல் இருக்க 
வேறு துணை யார் எனக்கு வேண்டும் ?