Pages

Monday, September 14, 2015

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்




எப்போதோ இந்தப் பாடலை பெங்களூர் இரமணி அம்மாள் பாடிடக் கேட்டிருக்கிறேன்.
அந்த ராகம் நினைவில் இல்லை. 

இன்றோ கந்தன் வந்த உடன், 
என் மனதில் தெரிந்த ராகத்தில் பாடி விட்டேன். 

பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களுக்கு என் நன்றி. 
இந்தப் பாடலை இயற்றியவருக்கும் எனது நன்றி.
கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்