| ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள |
| ரந்திபக லற்றநினை | வருள்வாயே |
| அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை |
| அன்பொடுது திக்கமன | மருள்வாயே |
| தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற |
| சந்திரவெ ளிக்குவழி | யருள்வாயே |
| தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் |
| சம்ப்ரமவி தத்துடனெ | யருள்வாயே |
|
| மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன |
| முன்றனைநி னைத்தமைய | அருள்வாயே |
| மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி |
| வந்தணைய புத்தியினை | யருள்வாயே |
| கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் |
| கொண்டுஉட லுற்றபொரு | ளருள்வாயே |
| குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு |
| கொங்கணகி ரிக்குள்வளர் |