Pages

Friday, February 25, 2011

OM MURUGA



Madam Kavinaya pens a bhajan in her blog:
http://bhajanaipaadalkal.blogspot.com

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Tuesday, February 15, 2011

அருணகிரி, திருப்புகழ்






அவனி தனிலே பிறந்து,
மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ......
இளையோனாய்
அரு மழலையே மிகுந்து,
குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள், 
 கவு மறை ஓதும் அன்பர் 
திருவடிகளே நினைந்து ......
துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி,
வெகு கவலையால் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்


மவுன உபதேச சம்பு, 
மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர் 
மன மகிழவே அணைந்து, 
ஒருபுறம் அதாக வந்த 
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா




பவனி வரவே உகந்து,
மயிலின் மிசையே திகழ்ந்து 
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா 
பரமபதம் ஆய செந்தில், 
முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!


அருணகிரி, திருப்புகழ்

Sunday, February 13, 2011

Swamimalai Murugan Temple And A song on Muruga at Uthara Swamimalai, Delhi

முதலில் சுவாமிமலை பற்றிய வர்ணனை .  தினமலர் பத்திரிகையில் வந்தது. நன்றி: முருக பக்தன் அவர்கள்.







உத்தர சுவாமிமலை என்றும் மலை மந்திர் எனவும் போற்றப்படும் தில்லி வாழ் மக்களின் அன்புத் தெய்வமான முருகனின் அருளை வேண்டி திருமதி லலிதா மிட்டல் அவர்கள் எழுதிய பாட்டு இது.  அவர்கள் வலைக்கு செல்ல இந்த பதிவின் தலைப்பைக்  கிளிக்கவும்.




மலைமந்திர் முருகதரிசனம் [தில்லி மலை மந்திர் இல் முருகனைத்
தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]
====================================================================

கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
' அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!

தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?
Posted by Lalitha Mittal

Thursday, February 3, 2011

பிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.



பிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.
ராகம் அமீர் கல்யாணி. ரூபக தாளம்.

Tuesday, February 1, 2011

மயில் வாஹன மன மோகனா ..



மயில் வாஹன மன மோகனா .. ராகம் மோகனம்.
பாப நாசம் சிவன் பாடல் . பிரியா சகோதரிகள் பாடுகிறார்கள்.