முதலில் சுவாமிமலை பற்றிய வர்ணனை . தினமலர் பத்திரிகையில் வந்தது. நன்றி: முருக பக்தன் அவர்கள்.
உத்தர சுவாமிமலை என்றும் மலை மந்திர் எனவும் போற்றப்படும் தில்லி வாழ் மக்களின் அன்புத் தெய்வமான முருகனின் அருளை வேண்டி திருமதி லலிதா மிட்டல் அவர்கள் எழுதிய பாட்டு இது. அவர்கள் வலைக்கு செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்கவும்.
மலைமந்திர் முருகதரிசனம் [தில்லி மலை மந்திர் இல் முருகனைத்
தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]
====================================================================
கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
' அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!
தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?
Posted by Lalitha Mittal