Pages

Monday, April 25, 2011

முருகன் அருள் மாலை.

முருகன் அருள் மாலை. 
தெய்வப்புலமையுடன் கவிதை உலகில் மயில் போல நடனமாடும் எனது வலை நண்பர் திரு சிவகுமார் அவர்களது கவிதைகளைப் படிக்கையிலே கண்களிலே நீர் பெருகும். இதயத்திலே அன்பு சுரக்கும். அருள் மழை பெய்யும். 
தன்னைப் பற்றிய அவரது அறிமுகம் இதோ:
பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்
அவரது வலையில் காணும் ஒரு கவிதையை, இந்தக் கிழவன் பல ராகங்களில் பாட கேழுங்கள். .


பூமாலை சூட்டியும் பொன்னாரம் சாத்தியும் பூஜிக்கும் பக்தரிடையே
பூப்போன்ற வார்த்தையால் பொன்போன்ற கவிதையால் புகழாரம் சாத்துகின்றேன்
பாமாலை சூட்டியுன் பாதார விந்தங்கள் பணிவோடு போற்றுகின்றேன்.
பார்வதி பரமனின் பாலனே வேலனே பாராளும் பாலமுருகா

 அடுத்து படிக்க அவரது வலைக்குச் செல்லவும்.
This is the first of the sixteen stanzas in the
Lyric Composed by Thiru சிவகுமாரன்
அவரது வலைக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள். அல்லது பின் வரும் தொடர்பை கட் அண்ட் பேஸ்ட் செய்யுங்கள். 
http://arutkavi.blogspot.com
subbu thatha sings as a Ragha malika