கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Saturday, June 18, 2011
அழகுமயில் ஏறி
அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!
பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!
அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!
--கவிநயா
http://muruganarul.blogspot.com