கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே !
செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே.
வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என்
மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
பொங்காதரவோடும் அடங்கா மகிழ்வோடும்
பெரும் காதலோடும் - ஐயன்
தங்க மயிலினிடை துங்க வடிவினொடு
(சிங்கார)
கந்தன் பணியும் அன்பர் சொந்தன்
கருணைகொள் முகுந்தன் மருகன் முருகன்
முந்தென் வினைப்பயந்த பந்தன்(ம்) தொலைத் - தருளை
இந்தா இந்தா என்று ஏழைக்குடி முழுதும் வாழ அருள் புரிய