***********************************************************************************************************
****************************************************************************************************************
ஆறுபடை வீடு எங்கும் அழகன் ஆறுமுகன்.
வேலன் குமரன் ஞானஸ்கந்தன் செந்தூரன்
வேண்டி வரும் பக்தர் வினை யாவும் தீர்ப்பவன்.
பாலன் அவன் ஆண்டியாகி பழனி சென்றவன்
ஞாலத்திற்கு வேதமத்தின் பொருள் சொன்னவன் -
உண்மைப்பொருள் சொன்னவன்.
பாடுவோம் பாடுவோம் திருப்புகழை.
ஓதுவோம் ஓதுவோம் குகன் நாமத்தை.
கந்தனையே சிந்தனையில் என்றும் கொள்ளுவோம்.
வந்தனை செய்வோம். வேல் வேல் எனச்சொல்வோம்.
ஆறெழுத்து மந்திரமாம் ஆறுமுகன் பெயர்.
தீரவே நம் வினைகளெல்லாம் தினமும் சொல்லுவோம்
சரவணபவ எனச் சொல்லும் போதிலே
அரவணைப்பான் அவன் அருள் பொழிவான்.
எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன். நான்
எங்கு என்ன செய்தாலும் நாவில் ஆறுமுகன், என்
நாவில் முருகன்.