Pages

Showing posts with label திருப்புகழ். Show all posts
Showing posts with label திருப்புகழ். Show all posts

Tuesday, February 15, 2011

அருணகிரி, திருப்புகழ்






அவனி தனிலே பிறந்து,
மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ......
இளையோனாய்
அரு மழலையே மிகுந்து,
குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள், 
 கவு மறை ஓதும் அன்பர் 
திருவடிகளே நினைந்து ......
துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி,
வெகு கவலையால் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்


மவுன உபதேச சம்பு, 
மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர் 
மன மகிழவே அணைந்து, 
ஒருபுறம் அதாக வந்த 
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா




பவனி வரவே உகந்து,
மயிலின் மிசையே திகழ்ந்து 
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா 
பரமபதம் ஆய செந்தில், 
முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!


அருணகிரி, திருப்புகழ்