Pages

Showing posts with label வில்லினை ஒத்த புருவங்கள். Show all posts
Showing posts with label வில்லினை ஒத்த புருவங்கள். Show all posts

Wednesday, December 22, 2010

வில்லினை ஒத்த புருவங்கள்

வில்லினை ஒத்த புருவங்கள்
பாரதியார் பாடல்.  முதலில் எம்.எஸ். பாடுவதை கேட்போம்.





அதே பாடல். நித்ய ஸ்ரீ பாடுகிறார்.
காவடி செந்து மெட்டில்





வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!


வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!

பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

ந்த பாடலுக்குப் பொருள் சொன்ன கண்ண பிரான் இங்கே இருக்கிறார். பதிவின் தலைப்பை கிளிக்கினாலும் வருவார்.  அவர் கண்ண பிரான்.