கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Saturday, June 18, 2011
அழகுமயில் ஏறி
அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!
பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!
அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!
--கவிநயா
http://muruganarul.blogspot.com
Friday, June 17, 2011
வேல் வந்து வினை தீர்க்க
இந்த அழகான அற்புத பாடலை இயற்றிய சுப்பு வாத்தியார் வலைக்குச் செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.
Monday, May 30, 2011
Friday, May 20, 2011
ஓராறு முகனே .....
neelakanta deekshithar iyatriya muruga gaanam.
முருக கானம்.
நீல கண்ட தீட்சிதர் இயற்றியது.
திருமதி ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள்.
ராகம்: ரீதி கெள்ள
ஓராறு முகனே .....
Labels:
ஓராறு முகனே
Wednesday, May 4, 2011
Om Saravana bhava Om !
This KRITHIGAI GEETHAM is composed by Mrs.Lalitha Mittal.
Please click the title of the posting to log on to the author of the song.
subbu thatha sings this geetham in Raag Bhoopalam
Monday, April 25, 2011
முருகன் அருள் மாலை.
முருகன் அருள் மாலை.
தெய்வப்புலமையுடன் கவிதை உலகில் மயில் போல நடனமாடும் எனது வலை நண்பர் திரு சிவகுமார் அவர்களது கவிதைகளைப் படிக்கையிலே கண்களிலே நீர் பெருகும். இதயத்திலே அன்பு சுரக்கும். அருள் மழை பெய்யும்.
தன்னைப் பற்றிய அவரது அறிமுகம் இதோ:
பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்அவரது வலையில் காணும் ஒரு கவிதையை, இந்தக் கிழவன் பல ராகங்களில் பாட கேழுங்கள். .
பூமாலை சூட்டியும் பொன்னாரம் சாத்தியும் பூஜிக்கும் பக்தரிடையே
பூப்போன்ற வார்த்தையால் பொன்போன்ற கவிதையால் புகழாரம் சாத்துகின்றேன்
பாமாலை சூட்டியுன் பாதார விந்தங்கள் பணிவோடு போற்றுகின்றேன்.
பார்வதி பரமனின் பாலனே வேலனே பாராளும் பாலமுருகா
This is the first of the sixteen stanzas in the
Lyric Composed by Thiru சிவகுமாரன்
அவரது வலைக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள். அல்லது பின் வரும் தொடர்பை கட் அண்ட் பேஸ்ட் செய்யுங்கள்.
http://arutkavi.blogspot.com
subbu thatha sings as a Ragha malika
Saturday, April 16, 2011
Subscribe to:
Posts (Atom)