Pages

Friday, September 6, 2013





முருகனருள் என்னும் வலைத் தளத்தில் இந்த முருகன் பாடலைக் கண்டு வியந்தேன்.

பாடலாசிரியருக்கும் பாடியவருக்கும் பாட்டு இசை அமைத்தவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Friday, August 30, 2013

Sunday, August 25, 2013

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.


திகழ் எனும் பெயருடன் விளங்கும் திரு அகரம் அமுதா அவர்களின் வெண்பா முருகப்பெருமான் அருளை வேண்டி பாடப்பெறுகிறது.

உன்னை அன்றி வேறன்னே வேண்டும் எனக்கு என மனமுருகி பாடுவதை பார்த்தேன்.

நானும் பாடுகிறேன்.

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.

Friday, August 23, 2013

Wednesday, July 31, 2013

மலை மேலே இருக்காண்டி அந்தப் பழனியாண்டி

  மலையாண்டி.
மலையாண்டி அவன் தாண்டி
சிவனாண்டி மகனாண்டி
வேலேந்தித் திரிவாண்டி
நமைக் காக்க வருவாண்டி

மலை மேலே இருக்காண்டி
அந்தப் பழனியாண்டி
நற்பதம் வேண்டி
அவன் பாதம் பணிவோண்டி

மனதில் கவலையேண்டி
நினைத்தாலே போதுண்டி
இரக்கந்தான் கொள்வாண்டி
இறங்கி யவன் வருவாண்டி

நடராஜன் கல்பட்டு

  கல்பாட்டு நடராஜன் அவர்கள் எழுதியது.

Friday, July 26, 2013

அழகிய மயில் ஏறி வருவான் .

அழகிய மயில் ஏறி வருவான் .
என்னும் அருமையான முருகன் பாடலை கவிஞர் பாரதி தாசன் இயற்றி அவரது வலையில் இட்டு இருக்கிரார்கள்.

அதை நான் படிக்க படிக்க பரவசமானேன்.
பாடலை பிருந்தாவன் சாரங்க எனும் ராகத்தில் என்னையும் அறியாது பாடலானேன்.

என்ன அழகான கவித்வம் கொண்ட பாடல் இது.
எல்லாம் அந்த முருகன் அருளே.

பாடலின் முழு வடிவத்தையும் காண அவரது வலைக்குச் செல்ல இங்கே கிளிக்குங்கள்.


You can listen to the song also here

இங்கே தங்களது பாடலின் இசையைக் கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.