THIS VIDEO WAS SEEN BY ME AT www.kannansongs.blogspot.com
Courtesy: MY WEB FRIEND MR.KANNABIRAN.
COMPOSER OF THIS SONG : LALGUDI JAYARAMAN
செந்தில் நகர் மேவும் தேவா - சிவபாலா,
நீ
சிந்தை இரங்கி எனை ஆளவா - வேலவா!
எந்த வேளையும் உன்னை அன்றி - வேறோர் எண்ணம் உண்டோ?
எந்தன் உள்ளமும் நீ அறியாயோ? - ஏன் இந்த மாயம்?
(சிட்டை ஸ்வரம்)
இது தகுமோ? தருமம் தானோ?
வாராதிருக்க மருமம் ஏனோ?
கனிந்து வந்திடா விடில், யான் என் செய்குவேன்?
ஏதும் புகலிடம் அறியேன்;
ஒரு கணமேனும் மறந்தறியேன்;
இவ்விளம் பேதை..
மகிழ -
முழு மதி - முகம் அதில் -
குறுநகை யொடு
கருணை - பொழிய வா -
அருளே தருக வா - திரு மால் மருகா!
(முடிப்பு)
வா வா, ஆடும் மயில் மீது வா!
அழகா முருகா நீ..
.
உன் வடிவழகைக் காண, என் முன் நீ
(வா வா,
ஆடும் மயில் மீது வா!)
என் முறை கேட்டிலையோ?
வர மனமிலையோ?
செவி புகவிலையோ?
இனியாகிலும்
(வா வா,
ஆடும் மயில் மீது வா!)
உருகி உருகி, உளம், ஊண் உறக்கம் இன்றிப்பெருகிப் பெருகி, விழி உடலது சோர்ந்திடஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்மனம் வாடினேன் - துயர் ஓடிடவே(வா வா, ஆடும் மயில் மீது வா!)அன்றே ஒரு நாளும் உனைக் கை விடேன் - என அன்புடனே ஆதரவைச் சொன்னதும், மகிழ்ந்துளம் கலந்ததும் - சிறிதும் நினைவிலையோ?பரம தயையும் - பரிவும் உறவும் - மறையுமோ இன்று?இனித் தாளேன்!தணிகை வளரும் அரு மணியே, என் கண் மணியே,என் உயிரின் துணையே!(வா வா, ஆடும் மயில் மீது வா!)ராகம்: நீலாம்பரிதாளம்: ஆதிஎழுதி/இசை: லால்குடி ஜெயராமன்