கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Friday, January 31, 2014
Wednesday, January 1, 2014
Tuesday, December 10, 2013
Saturday, November 30, 2013
அவனி தனிலே பிறந்து....
அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ...... இளையோனாய்
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்
மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்
மன மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா

பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா
பரமபதம் ஆய செந்தில், முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!
படங்கள் எல்லாம் முருகனருளால், முருகனருள் வலையில் இருந்து இரவலாக வாங்கி வந்தவை.
முருகன் அருளால் கண்ணபிரான் அனுமதி தருவாராக.
முருகன் அருளால் கண்ணபிரான் அனுமதி தருவாராக.
Friday, November 29, 2013
Sunday, November 24, 2013
Saturday, November 9, 2013
Subscribe to:
Posts (Atom)