Pages

Saturday, March 30, 2013

Friday, March 22, 2013

கந்தா கடம்பா கதிர்வேலா


KANDHA KADAMBA KATHIRVELA




     கந்தா கடம்பா கதிர்வேலா ...  என்
     கண் முன்னே இன்று வா ... வா...

     விண்ணில் வலம் வந்த கந்தா முருகா .   என்
     கண்முன்னே இன்று வா.  வா வா..


     ஆறு படை வீடு கண்டாய் முருகா முருகா.   ..  எனக்கு
     ஆறுதல் சொல்ல வா...

     குன்றிலே சென்றமர்ந்த குமரா..வேலா.   என் வினைகளை
     வென்றிட வழி ஒன்று தா...   தா.

     கந்தா கடம்பா கதிர்வேலா...


    மலேஷிய பயணத்தில் தைப்பூச தினத்தன்று திருமதி கவி நயா அவர்கள் பினாங்கு முருகன் கோவில் வெள்ளி ரத நிழற்படத்தைப்
    பார்த்த பரவசத்தில் எழுதிய பாடலிது.

    இந்த ப்பாடலுக்கான பெருமை எல்லாம் முருகனையும் கவி நயா அவர்களையுமே சாரும்.
  
  

Sunday, March 17, 2013

பிரணவத்தின் பொருளை


கந்தன் என் கைதி !

பிரணவத்தின் பொருளை விளக்காத அயனைச்
சிறையிலிட்ட சண்முகா !
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

அரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம
குருக்கோலம் பூண்ட குகா!
தந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக்
கண்டதும் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த
அழகனே!ஆறுமுகா!
குழந்தைக்குறும்பனாய் அவ்வைக்கு நீகாட்டும்
கோலமோ ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கோவணாண்டியாய் ஆவினன்குடிதனில்
மேவும் பாலமுருகா!
சுரமகள் ,குறமகள் பதியாய் குன்றத்திலுந்தன்
தரிசனம் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

Mrs.Lalitha Mittal is the author of the song above.
 

Friday, March 15, 2013

தண்டம் ஒரு கையிலே நீறு அவன் மெய்யிலே




தண்டம் ஒரு கையிலே நீறு அவன் மெய்யிலே
 கந்தா வென்று சொல்லி விட்டால் வந்திடுவான் நொடியிலே!

 கந்தனுக்கு அரோஹரா! 
கடம்பனுக்கு அரோஹரா! 
வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 


அன்னை தந்தை துறந்து வந்தான் கோவணாண்டியாய்
 நமக்கு அருளிடவே இறங்கி வந்தான் பழனியாண்டியாய்! 
மயிலேறி வந்தானே மலையேறி நின்றானே 
செல்லக் கோபம் காட்டி நமது உள்ளங்களை வென்றானே! 

கந்தனுக்கு அரோஹரா! 
 கடம்பனுக்கு அரோஹரா! 
 வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 

ஆறுமுகம் கொண்டவன்நம் அழகு வேலவன் 
தன்னைக் கூறுமடி யார்கள் வினை தீர்க்க வந்தவன்! 
 வேலவனை வணங்கினால் வேதனைகள் தீருமே 
வேலை வணங்கும் வேலை மட்டும் செய்து வந்தால் போதுமே! 

கந்தனுக்கு அரோஹரா! 
கடம்பனுக்கு அரோஹரா! 
 வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 

 ************************* கவிநயா 8:00 PM (12 hours ago) to me