தண்டம் ஒரு கையிலே நீறு அவன் மெய்யிலே
கந்தா வென்று சொல்லி விட்டால் வந்திடுவான் நொடியிலே!
கந்தனுக்கு அரோஹரா!
கடம்பனுக்கு அரோஹரா!
வேலனுக்கு அரோஹரா!
பாலனுக்கு அரோஹரா!
அன்னை தந்தை துறந்து வந்தான் கோவணாண்டியாய்
நமக்கு அருளிடவே இறங்கி வந்தான் பழனியாண்டியாய்!
மயிலேறி வந்தானே மலையேறி நின்றானே
செல்லக் கோபம் காட்டி நமது உள்ளங்களை வென்றானே!
கந்தனுக்கு அரோஹரா!
கடம்பனுக்கு அரோஹரா!
வேலனுக்கு அரோஹரா!
பாலனுக்கு அரோஹரா!
ஆறுமுகம் கொண்டவன்நம் அழகு வேலவன்
தன்னைக் கூறுமடி யார்கள் வினை தீர்க்க வந்தவன்!
வேலவனை வணங்கினால் வேதனைகள் தீருமே
வேலை வணங்கும் வேலை மட்டும் செய்து வந்தால் போதுமே!
கந்தனுக்கு அரோஹரா!
கடம்பனுக்கு அரோஹரா!
வேலனுக்கு அரோஹரா!
பாலனுக்கு அரோஹரா!
*************************
கவிநயா
8:00 PM (12 hours ago)
to me