கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Friday, March 22, 2013
கந்தா கடம்பா கதிர்வேலா
KANDHA KADAMBA KATHIRVELA
கந்தா கடம்பா கதிர்வேலா ... என்
கண் முன்னே இன்று வா ... வா...
விண்ணில் வலம் வந்த கந்தா முருகா . என்
கண்முன்னே இன்று வா. வா வா..
ஆறு படை வீடு கண்டாய் முருகா முருகா. .. எனக்கு
ஆறுதல் சொல்ல வா...
குன்றிலே சென்றமர்ந்த குமரா..வேலா. என் வினைகளை
வென்றிட வழி ஒன்று தா... தா.
கந்தா கடம்பா கதிர்வேலா...
மலேஷிய பயணத்தில் தைப்பூச தினத்தன்று திருமதி கவி நயா அவர்கள் பினாங்கு முருகன் கோவில் வெள்ளி ரத நிழற்படத்தைப்
பார்த்த பரவசத்தில் எழுதிய பாடலிது.
இந்த ப்பாடலுக்கான பெருமை எல்லாம் முருகனையும் கவி நயா அவர்களையுமே சாரும்.