கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே ! செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
Monday, December 31, 2012
Friday, December 28, 2012
Friday, December 21, 2012
Friday, December 14, 2012
Saturday, December 8, 2012
Karthigai Bhajan
A wonderful Bhajan from the repertoire of Mrs.Lalitha Mittal on the Eve of Karthigai Deepam.
You may click the title of the posting to see the text of this song.
You may feel some traces of Raag Behag here and there.
Monday, December 3, 2012
Muruga and flying peacock
Dr.VSK composes a beautiful song on the Flying Peacock on whose Wings tours Lord Muruga around the world.
His song is pinned as a comment to the posting of Thiru GMB . I request the viewers to click the title of this posting to move on to his blog.
You can also listen to the song here.
பாடலை இங்கேயும் கேட்கலாம்.
subbu thatha.
பாடலை இங்கேயும் கேட்கலாம்.
subbu thatha.
Saturday, December 1, 2012
மயில்வாகனன் ஆனான்
Thiru GMB composes a song on Lord Muruga. Kindly log on to this blog to see the text of the song.
ஜி. எம் பி சார் பாட்டினை இங்கே ராகத்தில் கேட்டு மகிழுங்கள்
Tuesday, November 27, 2012
Sunday, November 18, 2012
Thursday, November 15, 2012
MURUGA.. MURUGA ... KANDHA
Please click here to log on to her Blog WHICH SPREADS DIVINITY THROUGHOUT THE WORLD
இங்கே கந்தனின் புகழைக் கேளுங்கள்
சுப்பு தாத்தா
Thursday, November 8, 2012
Saturday, October 27, 2012
Friday, October 26, 2012
Thursday, October 18, 2012
Friday, October 12, 2012
Monday, October 8, 2012
Friday, October 5, 2012
Friday, September 28, 2012
Saturday, September 15, 2012
Friday, September 14, 2012
கந்தன் புகழ் பாடும் பாடல் இது.
கந்தனை பார்த்தால் புண்ணியம்.
கந்தன் புகழ் கேட்டால் புண்ணியம்.
கந்தா என மனமுருகி ஒருதரம் சொன்னால் புண்ணியம்.
கந்தன் திரு நீறு அணிந்தால் புண்ணியம்.
கந்தா என்று ஒரு முறை நினைந்தாலே புண்ணியம்.
இப்பாடலை எனது வலை நண்பர் முருக பக்தர் ஜோதிட நிபுணர் திரு எஸ்.பி.சுப்பையா அவர்களின் வலையில் கண்டேன். பெரிதும் மனம் உவந்தேன்.
இதை என் வலையில் இட்டால் என் உற்றமும் சுற்றமும் படிக்க ஏதுவாக இருக்குமென நினைத்து அதை இங்கே இட்டிருக்கிறேன்
Tuesday, September 11, 2012
Friday, August 31, 2012
Tuesday, August 28, 2012
Tuesday, August 14, 2012
Sunday, August 12, 2012
sivalogam thiru vakuppu - SAINT Arunagirinathar
Saint Arunagirinathar THIRUPUGAZH THIRU VAKUPPU
THIRUPALANI.
LAST STANZA
I AM SINGING THE SONG IN TRADITIONAL BHAIRAVI.
Saturday, August 11, 2012
SAINT Arunagirinathar THIRUPUGAZH Thirupalani Thiru Vakuppu
i am grateful to our web friend scholar Thiru Kannabiran who has published this Final Song of THIRUPUGAZH THIRUPALANI THIRU VAKUPPU IN HIS BLOG .
THANK YOU THIRU KANNABIRAN.
YOU CAN LISTEN TO YOUR SONG IN YADHUKULA KAMBHODHI ALSO .
Friday, August 10, 2012
Monday, August 6, 2012
Sunday, August 5, 2012
Saturday, August 4, 2012
Tuesday, July 31, 2012
Sunday, July 29, 2012
Monday, July 23, 2012
Saturday, July 21, 2012
Sunday, July 15, 2012
Saturday, June 30, 2012
Thursday, June 28, 2012
Friday, June 8, 2012
Sunday, June 3, 2012
Saturday, June 2, 2012
Sunday, May 27, 2012
அழகா ! குகா ! ஷண்முகா !!
http://youtu.be/W8yAJMh7DIY
Listen here
A new Atlas
revealing the MURUGA MAP
where one gets to know the Abodes of Lord Muruga
as well as other holy temples where Saint Arunagirinathar,
in his ecstacy,
sang the Glory of Lord Muruga.
This link for this atlas is available, as you log into the blog of my web friend
Thiru Kannabiran also known as KRS
Labels:
Lord Murga Map
Saturday, May 26, 2012
Saturday, May 12, 2012
Wednesday, May 9, 2012
Tuesday, May 8, 2012
Wednesday, April 25, 2012
Monday, April 23, 2012
KANDHANAI.vandhanai seyvom
திருமதி லலிதா மிட்டல் அவர்கள் கந்தனை வந்தனை செய்வோம் என்று துவங்கி ஒரு பாடல் எழுதி இருக்கிறார்கள். அதை, நான் காவடி சிந்து மெட்டில் இங்கு பாடுகிறேன்.
Tuesday, April 10, 2012
SKANDHAM VANDHEHAM
ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம்
பரமேஸ்வரி ப்ரியநந்தனா!சுரகுஞ்சரி மனமோஹனா!
வருவாய்,அருள்வாய் மயில்வாகனா!
Thiru
ஏரகத்தோனே !வேல்முருகா! நாராயணனின் திரு மருகா!
சூரசம்ஹாரா!சிவகுகா!ஆறிருகண்ணனே!ஆறுமுகா!
ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம்
ஸ்கந்தம்வநதேசுப்ரமண்யம்வந்தே
எந்தன் சிந்தைபுகுந்து ,oru சந்தம் தந்து
விந்தைபுரிந்த கந்தா!...அனந்தா!
உந்தன்பாதாரவிந்தம் எந்தன் இல்லம்
வந்தே தினம் thinamதரிசனம் தா ,.. தா..
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்
ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே
எந்தன்சிந்தை புகுந்து oru santham thanthu
விந்தைபுரிந்த கந்தா! ..அனந்தா!
saravanabhava உன் திருமந்திரம் என்
சிந்தையில் ஒலிக்க வரம் ondru தா
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம் வந்தேஹம் சுப்ரமண்யம்
Saturday, April 7, 2012
muruga
Smt.Soundara Kailasam has composed this song on Lord Muruga.
The song is published by our web friend, popular astrologer Thiru S.P.Subbiah Vaathiar, in his highly popular
blog . We thank him heartily for publishing the song.
subbu thatha sings the song in raag shanmughapriya
Please log on to his blog by clicking the title of this posting.
Tuesday, April 3, 2012
ஆறுமுகன் அருள்வான்!
SPECIAL SONG FOR PANGUNI UTHIRAM COMPOSED BY MRS.LALITHA MITTAL.
இன்று முருகனுக்கு எல்லா தலங்களிலும் சிறப்பு வழிபாடு.
பங்குனி உத்திரம் அன்று முருகனை நினைந்து உருகும் லலிதா மிட்டல் அவர்களின் வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.
Tuesday, March 27, 2012
சரவணபவ ஓம்முருகா,சரணம்
Smt.Lalitha Mittal has composed a Beautiful Lyric on Lord Muruga.
subbu thatha sings in Raag hamsadwani
Saturday, March 24, 2012
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - அன்று
குன்னக்குடி இசை கேட்க பக்தர்கள் கூட்டம்
கண்ணதாசன் பாடலில் தான் எத்தனை வேகம் அந்தக்
குமரன் பெயர் சொல்வதில்தான் எத்தனை மோகம் !!
குன்னக்குடி இசை கேட்க பக்தர்கள் கூட்டம்
கண்ணதாசன் பாடலில் தான் எத்தனை வேகம் அந்தக்
குமரன் பெயர் சொல்வதில்தான் எத்தனை மோகம் !!
Saturday, March 17, 2012
DKP-சிங்கார வேலவன் வந்தான்
சிங்கார வேலவன் வந்தான்
என்றனை ஆள
(சிங்கார)
பொங்காதரவோடும் அடங்கா மகிழ்வோடும்
பெரும் காதலோடும் - ஐயன்
தங்க மயிலினிடை துங்க வடிவினொடு
(சிங்கார)
கந்தன் பணியும் அன்பர் சொந்தன்
கருணைகொள் முகுந்தன் மருகன் முருகன்
முந்தென் வினைப்பயந்த பந்தன்(ம்) தொலைத் - தருளை
இந்தா இந்தா என்று ஏழைக்குடி முழுதும் வாழ அருள் புரிய
(சிங்கார)
Thursday, March 15, 2012
முருகய்யா - நிதம் உனை
My web friend Mr.Jeeva Venkataraman has composed this song on Lord Muruga. He has composed this in raag chenchurutti set to Taal: Adhi.
I am however blank with respect to any tala or Raaga. I am a lay man singing in wilderness. So let me sing it before Lord Muruga and let Him decide the raaga in which I sing.
பல்லவி
விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா - உனை
விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா
அனுபல்லவி
தொட்டுத் தொடர்ந்திடும் பழவினைகளும் தொடரவே - உனை
விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா
சரணம்
சொட்டு சொட்டெனத் தூர்ந்திடும் நின்னருளுக் கேங்கிட
பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள்
மட்டிலா மகிழ்ச்சியை தந்ததே முருகய்யா - நிதம் உனை
விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா
TO MOVE ON TO THE AUTHOR OF THE SONG, PLEASE CLICK THE TITLE OF THIS POSTING.
Friday, March 9, 2012
கந்தனே கடம்பா போற்றி
அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்
என எப்போதும் நினைக்கும் திரு சிவகுமாரன் அவர்கள் கவிதை இதோ:
அவர்கள் வலைக்குச் செல்ல தலைப்பை களிக்கலாம்.
முன்வினைப்பயன் முன்னே இருந்து அதுவும் நன்றே இருந்தால் தானே முருகனைப் பாட இயலும் ? முன்னவனே முன் நின்றால் முடியாதது உண்டோ என்பர். சிவகுமாரன் விஷயத்திலோ அந்த முருகனே முன் நின்று இக் கவிதையை இயற்றி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
சிவகுமாரன் அவர்கள் இந்த கவிதையை இயற்றியது அவர்கள் முன் ஜன்மத்தில் செய்த
புண்ணியமே. இதில் ஐயமில்லை.
கவிதையை இப்போது படிப்போம்.
வெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா
வேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்
கொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,
கூட்டமாய் காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்
மற்றவை எல்லாம் நாங்கள் , மறந்து(ன்)னைக் காண வந்தோம்
மயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .
ஒற்றுமை யாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்
உன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா !
செந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்
தெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்?.
சிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும்
சிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்
வெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்
வேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும். .
வந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால்
வான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.
கடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை
கந்தனே உன்னைக் காண, காலங்கள் பார்க்க வில்லை .
நடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,
ஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.
கடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை
கதிர்வடி வேலா என்றோம், கடப்பதும் தூரம் இல்லை .
கடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா
காலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.
வள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.
வஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்
துள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,
தோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.
உள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.
உன்நாமம் சொல்லிச் சொல்லி ஊழ்வினை தாண்ட வேண்டும்.
வள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி
வளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .
முப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.
மூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.
தொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்
துர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்
அப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம்
அகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்
சுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்
சூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.
திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும்.
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்
காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
தீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்
திசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே
ஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன்
ஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .
வாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன்
வடிவத்தைக் கண்டு சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .
தாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி
தஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .
நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு
அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு
கோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும்.
எந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.
ஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி
கந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி
கணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.
சுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி
சூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.
செந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய் போற்றி
சேவற்கொடி உடையாய் போற்றி சேவடி பணிந்தேன் போற்றி-
சிவகுமாரன்Thursday, March 1, 2012
Tuesday, February 28, 2012
முருகா முருகா வாடா
you may listen here also:
பாடலை இங்கே கேளுங்கள்.
http://youtu.be/dRjLvfQmXOs
முருகா முருகா வாடா - சின்ன
முத்துக் குமரா வாடா!
கந்தா கடம்பா வாடா - எங்கள்
கார்த்தி கேயா வாடா!
சின்னஞ் சிறு அடி எடுத்து – முருகா
சித்திரம் போல நடந்து வாடா!
வண்ண மணி ஒலித்திடவே – நீயும்
வண்ண மயில் ஏறி வாடா!
சந்தத் தமிழ் பாட்டுனக்கே – செல்லமே
கேட்க நீயும் ஓடி வாடா!
சங்கத் தமிழ் தந்தவனே – எங்கள்
சங்கடங்கள் தீர்க்க வாடா!
நானிருக்கும் நாள் வரைக்கும் – முருகா
நாடி உனை வணங்கிடணும்!
தேனிருக்கும் உன் பெயரே – தினம்
என் நாவில் தவழ்ந்திடணும்!
--கவிநயா
பன்னிருகரம் மூவிரு சிரம்
அதிசுந்தரம் !!
பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!
அசுரரையழித்த சுர சேனானி
ஒளிருது வெண்ணீறணிந்தவன் மேனி !
துணைவியாம் குன்றத்தில் தேவயானி !
தணிகையில் வள்ளியாம் இளையராணி !
பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!
வற்றாது கருணை சுரந்திடும் கேணி
பழநியம்பதிவாழ் தண்டாயுதபாணி !
பிறவிக்கடல்தாண்ட உதவிடும் தோணி
"சரவணபவ "எனும் மந்திரவாணி !
பன்னிருகரம் ,மூவிரு சிரம்,
குங்கும நிறம் ,அதிசுந்தரம்!
குகன் அதிசுந்தரம் !!
Lalitha Mittal
Listen here.
Saturday, February 25, 2012
Thursday, February 23, 2012
Mayavaram Sisters-Mooladhara Murthe-Murganai Bhaji Maname-Jonepuri-Papan...
First MOOLAADHARA MURTHE... OBEISANCE TO LORD GANESA
FOLLOWED BY
MURUGANAI BHAJI MANAME
Friday, February 17, 2012
Thursday, February 9, 2012
Tuesday, February 7, 2012
Sunday, February 5, 2012
Saturday, January 21, 2012
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கால்கள் அருள் வேண்டி, நின்
கால்கள் அருள் வேண்டி
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கால்கள் அருள் வேண்டி
கால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!
சிந்தனை எல்லாம் நீ சுந்தர வடிவேலா !
எந்தனை காக்க வா !!
பந்தங்கள் தொலைத்து நான் நின் பதம் சேர்ந்திட
வந்தெனை வாழ்விக்க வா !!
வேளை இ (ன்)னும் வந்திலையோ !! என்
வேதனைகள் தீர்த்திடவே !!
வேலா.!. உமை பாலா !!
வெண்ணீறு அணிந்தவா !!
வேலாயுதம் கொண்டே.. என்
வினைகள் தீர்க்க வா !! ...( கந்தா..கடம்பா... )
சரவண பவ ... நின்
சரணங்கள் பணிந்து நின்றேன்.
மரணம் வரும் அந்நாளில் .. நீ
வரணும் எனக் காத்திருப்பேன் . அருள்
தரணும் எனத் தவமிருப்பேன்.... (கந்தா.. கடம்பா...)
கால்கள் அருள் வேண்டி, நின்
கால்கள் அருள் வேண்டிகால் வலி பாராது,
காலமெல்லாம் நின்றேனய்யா.. நின் சன்னதியில்
கந்தா .. கடம்பா ... கார்த்திகேயா..
கலியுக வரதா..கணம் நீ வரம் தா !!Friday, January 20, 2012
Tuesday, January 17, 2012
Saturday, January 14, 2012
Friday, January 13, 2012
Thursday, January 12, 2012
Saturday, January 7, 2012
Subscribe to:
Posts (Atom)
குன்றுதூர் ஆடிடும் குமரா வா
குரவள்ளியை மணந்த வேலா வா
என்றும் உன் புகழ் பாட அருளாயோ.
ஏ ழையின் குறைதனை கேளாயோ
குறவள்ளியை மணந்த வேலா வா
ஸ்வரங்களில் மாலை சூட்டினேன்
பழ முதிர் சோலியில் உறையும் சரவந பவனே வா
பதம் பணிந்தேன் தருணமிதே பாத மலரே